Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் பருத்திவிளை பகுதியில் தங்க நாடார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற தங்க நாடார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் தங்க நாடார் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்கநாடாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |