Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களான சின்னதுரை, வடிவேல் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காவல்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை சின்னதுரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே நிலக்கரி லோடு ஏற்றி முருகேசன் என்பவர் ஓட்டி வந்த லாரி சின்னதுரையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வடிவேலும், சின்னதுரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |