Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் கன்னாபட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி 47 வயதுடைய பசுபதி. இவர் தனது சொந்தக்காரர் ஒருவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேலை பார்த்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |