மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூர் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி செம்படாபாளையத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்றுயுள்ளார். அப்போது ராஜேஸ்வரி நிலைதடுமாறி வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.