வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பஞ்சவர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.