வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளி கிராமத்தில் சவுரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சவுரியம்மாள் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி ஆகிவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சவுரியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகையை திருடிச் சென்றது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.