மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் கிண்டி வனத்துறை அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.