Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொக்கம்பட்டியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கிரண் குமார் சென்னையிலும், மகள் நியூசிலாந்திலும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமித்ராவை சென்னையில் இருக்கும் மகன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு ராஜ்குமார் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 பவுன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |