வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பருவப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தங்கமணி அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் 21 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தங்கமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.