பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கி கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.