Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருந்த தொழிலாளி…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முகேஷ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேஷை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |