தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தங்கராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கராஜை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இரணியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.