உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வெட்டமனை பகுதியில் அந்தோணி பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்தோணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணியால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தை நடத்த அவரது மனைவி நாகேஸ்வரி கூலி வேலைக்கு சென்றார்.
இதனை நினைத்து மனம் உடைந்த அந்தோணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த ஏர்வாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.