மனைவி கண்டித்ததால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணன் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சரவணன் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த ஜெயந்தி கணவரை கண்டித்ததுள்ளர்.
இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து சென்ற எருமப்பட்டி போலீசார் சரவணனின் உடலை மீட்டு உடற்கூறி ஆய்விற்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.