சீனாவில் வேலைக்கு செல்லும் ஒருவர் தன் குழந்தையைத் தன்னுடன் கூடைக்குள் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனாவை சேர்ந்த லீ என்பவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். அவர் தன்னுடன் தனது 2 வயதான Fie ‘er எனும் தன் மகளையும் வேலைக்கு செல்லும் போது வாகனத்தில் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார் .மேலும் fie 5 மாத குழந்தையாக இருக்கும் போதே அவளுக்கு நிமோனியா காய்ச்சல் என்பதால் பெற்றோர்கள் இருவருமே வேலை செய்து குழந்தையை பராமரித்து வருகின்றனர் .
This delivery courier has the cutest colleague: his two-year-old daughter. pic.twitter.com/EYTQlVIrzL
— South China Morning Post (@SCMPNews) March 29, 2021
மேலும் தன் மகளால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லி தனது மகளை தூரத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை டெலிவரி செய்ய செல்வாராம் .தற்போது Fie யின் கதை வெளியானதையடுத்து மக்களில் பலரும் முன்வந்து உதவுகின்றனராம். ஆனால் லி தன் பிள்ளைக்கு பழைய உடைகள் இருந்தால் கொடுங்கள் பணமும் ,புதிய உடைகளும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
மேலும் லியின் குடும்பம் சிறிய அறை ஒன்றில் தான் வசிக்கின்றனராம் . பணம் மட்டும் சந்தோஷம் இல்லை என்றும் தற்போது தாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார்.