Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வேலைக்கு போக கூடாது” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தாலப்பள்ளி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் லதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லதா வேலைக்கு செல்வதற்கு ரவி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக லதாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |