தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது சம்பந்த சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தங்களது பிரச்சனைக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தீர்வுகாண வேண்டும்.
இல்லையெனில் டிசம்பர் 17ஆம் தேதி அல்லது அடுத்த ஆறு வாரங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எந்த ஒரு பேருந்தும் இயங்காது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள்.