Categories
தேசிய செய்திகள்

வேலைநிறுத்தம் வெற்றி… மத்திய அரசே பொறுப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணப் பரிமாற்றங்கள், காசோலை பரிமாற்றங்கள் முடக்கத்தால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அத்தியாவசிய செலவுக்கு பணம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் வங்கிகள் தனியார் மயமாக்கபடுவதை எதிர்த்து ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் வங்கிகள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அது மட்டுமன்றி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நலன் மற்றும் ஓய்வுதியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |