Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பளு தான் காரணமா….? வருவாய் ஆய்வாளர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் அம்பேத்கர் நகரில் அருண்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேப்பாக்கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழரசி(11) என்ற மகளும், தமிழ்ச்செல்வன்(10) என்ற மகனும் இருக்கின்றனர். நிலையில் நேற்று காலை அருண்குமார் நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவி கதவை தட்டியுள்ளார். ஆனாலும் அருண்குமார் கதவை திறக்கவில்லை. இதனால் தேவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண்குமார் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதன் குமாருக்கு வரவேண்டிய பதவி உயர்வு நீண்ட நாட்களாகியும் வராதது தெரியவந்தது. மேலும் கடன் தொல்லையால் அருண்குமார் அவதிப்பட்டு வந்துள்ளார். அதோடு வேலைப்பளு அதிகமாக இருப்பதாக அருண்குமார் தேவி மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |