Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பார்த்த இடத்தில் கைவரிசை….. ரூ. 7.85 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள சௌகார்பேட்டை பகுதியில் பத்ரி வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் ஸ்டேஷனரி கடை மற்றும் பிளாஸ்டிக் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பத்ரி வீரசாமியின் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை வைத்த பத்ரி வீரசாமி கடையின் சாவி, கல்லா சாவி போன்றவற்றை ராஜாராமிடம் கொடுத்து கடையை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில் கடையில் தங்கி இருக்கும் ராஜாராம் நேற்று அவருடைய சகோதரர் பிரகாராமை கடைக்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து 2 பேரும் சேர்ந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்கள், வெள்ளி விநாயகர் சிலை, 2 சில்வர் மெட்டல் லாக் மற்றும் 7,85,000 ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை கடையிலிருந்து திருடியுள்ளனர். இவர்கள் கடையில் இருந்து திருடிய  பொருட்களுடன் வெளியே வரும்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் ராஜாராம் மற்றும் பிரகாராமிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவலர்கள்  உடனடியாக அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்தப் பையில் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்துள்ளது. அதன் பிறகு காவலர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கடையில் இருந்து பொருட்களை திருடியது தெரிய வந்தது. மேலும் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜாராம் மற்றும் பிரகாரம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |