இப்போது சமூகஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்-ல் வைரலாகும் செய்தியில் “பிரதம மந்திரி வேலை இல்லாதவர்களுக்கான திட்டத்தின் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகியது. பிரதமர் மோடியின் போட்டோவுடன் வைரலாகி வரும் இச்செய்தியில், வேலை இல்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக்கொள்ளுங்கள் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவுசெய்யுமாறு கூறப்பட்டு உள்ளது. உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால், தவறுதலாககூட அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். இந்த இணைப்பை கிளிக் செய்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம். PIBஆல் செய்யப்பட்ட உண்மை சரிபார்ப்பில் இக்கூற்று தவறானது என கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டுவீட் செய்து வேலை இல்லாதவர்களை PIB எச்சரித்து இருக்கிறது.