Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் பெரும்பாலான இளைஞர்கள் அவதிப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் கிராமத்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் அரியலூர் கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 18 வயது முதல் 35 வயது வரையிலான எட்டாம் வகுப்பு பயின்றவர்களிலிருந்தே டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் படித்தவர்கள் என எவர் வேண்டுமானாலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வேலைநாடுநர்கள் இணையதளத்தில் சென்று தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்யலாம்

Categories

Tech |