Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மே 31 கடைசி நாள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர விரும்பும் நபர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பு செய்வது அவசியம்.

அதன்மூலமாக அரசு பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் வேலைவாய்ப்பை பதிவு செய்து அதனை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை,தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டுகளாகி இருந்தால் போதும்.எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |