Categories
மாநில செய்திகள்

வேலையில்லா இளைஞர்களுக்கு…. தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாமிற்கு ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வருகின்ற பத்தாம் தேதி கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்கள் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இருந்து நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |