தூத்துக்குடியில் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களுக்கு தந்திருக்க கூடிய மக்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி முதலமைச்சர் தளபதி அவர்களுடைய ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர் குறிப்பிட்டு சொன்னதுபோல இங்கு இருக்கக்கூடிய வேலை இல்லா திண்டாட்டத்தை ஒலிக்க கூடிய வகையிலே…. முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வகையிலே பல்வேறு முதலீடுகளை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது.
படித்துவிட்டு பல குடும்பங்களிலே இளைஞர்கள், இளம் பெண்கள் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த காலமெல்லாம் மலையேற கூடிய வகையிலே இன்று பல தொழில் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி கொண்டுவரக்கூடிய வகையிலே ஆட்சியை முதலமைச்சர் தளபதி அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் பர்னிச்சர் பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது. விரைவில் அத்திட்டம் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இளைஞர்களுக்கு, படித்தவர்களுக்கு, இளம்பெண்களுக்கு வேலை கிடைக்க கூடிய வாய்ப்பை அத்திட்டம் உருவாக்கித்தரும்.
அதுமட்டுமன்றி தமிழகம் முழுவதும் இன்று இப்படிப்பட்ட தொழில் முதலீடுகளை கொண்டுவருவதற்கான அத்தனை முயற்சிகளையும் முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.