தான் கவிஞனா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவருடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பலரும் பதிவு செய்தனர் மற்றும் திரையுலகில் இவர் புரிந்த சாதனைகளின் தொகுப்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.இந்நிலையில் இவருக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.பின்பு இது கருத்து மோதலாகவே மாறிவிட்டது.
இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து நான் கவிஞனா என்று கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்வதெல்லாம் தேவையில்லாதது உங்கள் வேலையை முதலில் பாருங்கள் என்று ஆவேசத்துடன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு கூறிய வார்த்தைகள்.
“நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் வினா எழுப்புவது வீண். நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை. நான் வெறும் மொழியாளன். வேலையை பாருங்கள்; மனித வளத்தை மனவளத்தை மான்புறுத்துங்கள்”