Categories
உலக செய்திகள்

“வேலையோடு வா” 100 கோடி சொத்துக்கு சொந்தக்காரி…. அனுபவிக்க முடியாத பெண்ணின் சோகக்கதை….!!!!!

ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்குக் கொடுத்த டாஸ்க் தான் தற்போது வைரலாக வருகிறது. அதாவது 12 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ.90 கோடிக்கு சொந்தக்காரரான தன் தந்தை தன் மகளான கிளாரா ப்ரெளனுக்கு சொத்தை எழுதி வைத்துவிட்டு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொள்ள வேண்டும். தனது கடைசி ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே தன்னுடைய சொத்துக்களை கிளாராவுக்கு போகும்படி எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். இந்நிலையில் பல முயற்சிகள் எடுத்தும் ஒரு நிரந்தர விலையை பெற முடியாமல் திண்டாடி வருகிறார். கிளாரா தற்போது தன்னுடைய கணவன் லாரன் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். கிளாராவுக்கு சிறு வயதிலே ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ஹைப்பர் ஹேக்டிவிட்டி பிரச்சனையோடு போராடி வருகிறார்.

இதனால் தான் அவருக்கு நிரந்தர வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அவரால் கார் ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் தனது தந்தையின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், தயவு செய்து எனக்கு உரிமையானது எனக்கு கொடுங்கள். நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் எல்லாம் முயற்சியும் எடுத்து எதுவும் பயனளிக்கவில்லை என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் 40,000 பெற்று வந்துள்ளார். அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தினமும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்யவே சிரம்மபட்டு வருகிறேன். தன்னால் எப்போதும் ஒரு வேலையை பெற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

Categories

Tech |