ராணிப்பேட்டையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல வீட்டிலிருந்து பணி புரியும் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த வாகனம் இவர் மீது திடீரென்று மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.