தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. இதற்கான விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கிவரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.