தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. அதன்படி படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.
இதில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், உதவித்தொகை பெறுபவர்கள் ஓராண்டு கடந்த நிலையில் பணியில் இல்லை என்ற சுய உறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன் சமர்ப்பிக்காவிட்டால் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnvelaivaaippu.gov.in அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.