தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பணி கிடைக்காத 10,12,டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு தோல்வி பெற்றவர்களுக்கு 100 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாய் மற்றும் மாற்றுத்திறனாளி மேற்படிப்பு தேர்ச்சி ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் அவரவர் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.