Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சில நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் இன்று முதல் மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றும், இந்த சலுகை அனைவருக்கும் ஒரு முறை மட்டுமே என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அதுமட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |