10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பின் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த மதிப்பெண் சான்றிதழ் உடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களுக்கு பதிவுகள் செய்யப்படும். மேலும் இதற்காக www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இதனால் மாணவர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 12 ஆம் வகுப்பினையும் கூடுதல் பதிவாகவும், பதிவு செய்யாதவர்கள் புதிய பதிவையும் இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.