தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத் தேவைக்கு ஏற்றவாறு நவீன தொழில்நுட்பங்களின் பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைக்க செயலியை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.