மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா எனும் திட்டத்தின் கீழ் புதியதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 நபர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். மாபெரும் வேலைவாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குரிய ஒரு திட்டம் ஆகும்.
ரோஸ்கர் மேளா எனும் இத்திட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். அத்துடன் இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதும் தேசிய வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்பதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் திட்டமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் தங்களது அறிவு, திறன்கள் மற்றும் திறன்களை மேம்படுத்த igotkarmayogi.gov.in தளத்தில் மற்ற பாடங்களையும் ஆராய்ந்து கற்கலாம் என PMO அறிக்கை ஒன்று கூறியது.