2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று புதுப்பித்தல் சலுகை மீண்டும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அப்போது குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டு களில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்தவாறு வேலைவாய்ப்பு புதுப்பித்தல் சலுகையை பெற விரும்புபவர்கள் மார்ச் 1-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக தங்களுடைய பதிவினை புதுப்பித்துக்கொள்ள லாம். அவ்வாறு இயலாதவர்கள் மேலே குறிப்பிட்ட தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் மூலமாக புதுப்பித்து விரும்புவர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் முகவரியை பயன்படுத்தி மார்ச் 1ஆம் தேதி வரை தங்களுடைய பதிவினை புதுப்பித்துக்கொள்ள லாம் என்று தெரிவித்துள்ளார்.