தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் பட்டியலில் இருப்பது அமெரிக்கா. இங்கு நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 39 இலட்சத்தை கடந்து விட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,42,000 ஐ தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே மூடி மறைத்து பிற நாடுகளுக்கு பரவ விட்டுள்ளது. சீனா நினைத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும். என்று தொடர்ந்து அமெரிக்கா சீனா மீது குற்றம் சுமத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுடன் ஆதரவாக செயல்படுவதாக கூறி உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் “முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு சீனாவுடன் இணைந்து செயல்பட நீங்கள் தயாரா? என்று கேள்வி கேட்டபோது அதற்கு டிரம்ப், “எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்று தர சீனா உள்ளிட்ட யாருடனும் இணைந்து செயல்பட அமெரிக்க தயார் நிலையில் உள்ளது என அதிரடியாக கூறியுள்ளார். மேலும் அவர் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் சிகிச்சை இரண்டிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சாத்தியமான ஒரு தடுப்பூசி எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் உடனடியாக வினியோகிக்கப்படும் என்றும் விநியோகிப்பதில் அமெரிக்க ராணுவம் உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.