வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூரில் சிவராமகிருஷ்ணன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிரந்தரமான வேலை இல்லாததால் சிவராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை.
இதனால் வாழ்க்கையை வெறுத்த சிவராமகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.