வேலை இல்லாததால் மனமுடைந்த வைர வியாபாரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பெரிய கடைவீதி சம்ஸ்பிரான் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். வைர வியாபாரியான இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரத்தை விட்டுவிட்டு சீனிவாசன் வேலை எதுவுமின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் விரக்தியில் கடந்த 9ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சீனிவாசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கோட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.