தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். எங்காவது நமக்கு வேலை கிடைத்து விடுமோ என்ற ஏக்கத்தில் தினமும் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது. SSLC தோல்வி/தேர்ச்சி, SSLC பட்டயப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை என்று காத்திருப்பவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை அணுகி உதவி தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த உதவி தொகையை பெற்று பயனடைய வேண்டும்.
Categories