Categories
மாநில செய்திகள்

வேலை இல்லையா? நோ டென்ஷன்…. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

எட்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இதோ உங்களுக்கான வேலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசின் உரிய அனுமதியால், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  V.V.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில், வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமானது நடக்க உள்ளது.

இந்த தனியார் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரது தலைமையில் தொடங்கி வைக்க உள்ளனர். மேலும் இந்த முகாமிற்கு 100க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கு கொள்ள விரும்புவோர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ/ டிப்ளமோ போன்ற கல்வி தகுதியை பெற்று இருக்க வேண்டும்.

இதையடுத்து இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நேர்காணலில் பங்கேற்க, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சுயவிபரம் -10 நகல்கள், புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளின் நகல் வைத்திருக்க வேண்டும். இந்த முகமானது காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், இலங்கை அகதிகளுக்கு என சிறப்பு காலிபணியிடங்களும் உள்ளன. இது ஒரு இலவச சேவையாகும்.

இதனைத்தொடர்ந்து இந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பை, வேலை தேடுவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுபற்றி மேலும் அறிய, தொடர்புக்கு 04562-293613 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |