தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டனர். மேலும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்த நிலையில் அரசு வேலை வாய்பற்றவர்களுக்கு உதவித்தொகை அளிக்க திட்டமிட்டது. இதனையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவும் வகையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 வழங்கப்படும் இதோ போல் மாற்று திறனாளிகளில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 600 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்ற மாற்று திறனாளிகளுக்கு ரூ.600 வழங்கப்படும்.
அத்துடன் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படும். அதே மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டியது அவசியம்.