வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் என்ஜினீயரான அஸ்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு அலைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஸ்வின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வினின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.