Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறி அழுத பெற்றோர்…!!

பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நாகராஜன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் நாகராஜன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |