Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை தேடிச் சென்றபோது நடந்த பரிதாபம்…. லாரி மோதிய விபத்தில்… 2 பேர் பலி… சிகிச்சையில் சிறுவன்…!!!

திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது பொள்ளாச்சியில் இருந்து இளநீர் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற  லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த இன்திஜார், அசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.

மேலும் உயிருக்கு போராடிய ஜிசாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜிசாந்த்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |