வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் காளியப்பம்பாளையம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சபரி கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி கார்த்திக் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.