சமூகவலைத்தளங்களில் பரவி வரக்கூடிய போலி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் இருப்பதாவது “ஐ.ஆர்.சி.டி.சி.,யில் பல புது வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்குரிய கல்வி தகுதியுடனும், சம்பள விபரத்துடனும் கூடிய பட்டியல் சமூகவளைதளங்களில் பரவியும் வருகிறது. ஆகவே இந்த போலி அறிவிப்புகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்.
ஐ.ஆர்.சி.டி.சி-யில் வேலைவாய்ப்பு இருந்தால் அதற்கான முன் அறிவிப்பை https://www.irctc.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதனை தவிர்த்து தேசிய மற்றும் பிராந்திய செய்தித்தாள்கள், வேலை வாய்ப்பு அறிவிப்பு தாள்களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும். இதனை தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.