Categories
மாநில செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. மார்ச் 19ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள  நிலையில்தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 20ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் மொத்த காலியிடங்கள் 5,831 இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தேர்வுக்கு பதவிகளை நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை ,நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார்பதிவாளர் ஆகிய பகுதி 116 பணியிடங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  அறிவித்த போதிலும் தனியார் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்துகொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் விவேகானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற மார்ச் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பில் பங்கு பெற தேவையான விதிமுறைகள் அதில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பட்டதாரி பயிற்சி,டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையற்பயிற்சி, செவிலியர் பயிற்சி  போன்றவை முடித்தவர்கள் பங்கு பெறலாம் என கூறியிருந்தனர்.

மேலும் 150க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களின் சுய விவரம் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள 04286 – 222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |