தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொடங்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தனியார் துறைகளுடன் இணைந்து இன்று ஜூலை 22 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் சுய விவரங்களுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.