நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் தங்களுடைய வேலைவாய்ப்பினை வீட்டிலேயே இருந்து வந்ததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் தொடர்ந்து 3 மாதங்களாக வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் 57 சதவீதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதாக வேலை தேடும் தளமான Naukri.com வெளியிட்டுள்ள ஆய்வு கூறுகிறது.
சமீபகாலமாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகபட்சமாக 33 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு அடுத்ததாக மருத்துவத்துறையில் 82 சதவீதமும், ரீடெய்ல் தொகையில் 70 சதவீதமும் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. கல்வித் துறையில் 53%, வங்கி மற்றும் நிதிச் சேவை துறையில் 43%, தொலைத்தொடர்பு துறையில் 37% என வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மெட்ரோ நகரங்களில் வேலைவாய்ப்புகள் 88% உயர்ந்துள்ளன. இரண்டாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்புகள் 30% அதிகரித்துள்ளது.
நகரங்களின் அடிப்படையில் பெங்களூருவில் 133%, ஹைதராபாத்தில் 110%, புனேவில் 95%, சென்னையில் 85% வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன.